Select Menu

Ads

Headlines

Powered by Blogger.

Tamil Nadu

National

Circle Gallery

Shooting

Racing

News

Bottom




கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு: அருண் ஜெட்லி

புதுடில்லி: தன் மீதும், குடும்பத்தினர் மீதும் பொய் மற்றும் அவதூறு கருத்துக்களை தெரிவித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சி.பி.ஐ., வலையில் சிக்குகிறார். அவரின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகம், வீடு உட்பட 14 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது. வீட்டில் இருந்து 2.50 லட்சம் ரொக்கம், மூன்று அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அத்துடன், 'இன்டலிஜன்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம் இந்தியா' என்ற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர்கள் ஏ.கே.துகால், ஜி.கே.நந்தா மற்றும் 'என்டவர் சிஸ்டம்ஸ்' நிறுவன இயக்குனர்கள் சந்தீப்குமார், தினேஷ் குப்தா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. நந்தா வீட்டில் இருந்து 9.50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால்,என் அலுவலகத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்டனர். அரசியலில் என்னை வீழ்த்த முடியாத மோடி, பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்; அவர் ஒரு கோழை, மனநோயாளி.டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பல ஆண்டுகள் இருந்தார். அப்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைத்தேன். அதன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஜெட்லி மீதான ஊழல் குறித்த ஆவணங்களை வழங்கியுள்ளது. அந்த ஆவணங்களைக் கைப்பற்றவே என் அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை நடத்த, அவர் உத்தரவிட்டுள்ளார் என கூறினார். மேலும் டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்ட அருண் ஜெட்லி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஆம் ஆத்மி கூறியது. ஆனால் இதனை மத்திய அரசு, அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ., மேலிடம் மறுத்தது.

ஜெட்லிக்கு ஆதரவு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். அவரின் நேர்மை மீது நம்பிக்கை உள்ளது. டில்லி அரசில் உள்ள ஊழல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றவே ஆம் ஆத்மி முயற்சி செய்கிறது என கூறியுள்ளது.

கெஜ்ரிவால் மீது வழக்கு: இந்நிலையில் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி கோர்ட்டில், சிவில் மற்றும் கிரிமினல்அவதூறு வழக்கு தொடர உள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜெட்லி கூறுகையில், கெஜ்ரிவால் தவிர, குமார்விஸ்வாஸ், அசுதோஷ், சங்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் பாஜ்பாய் ஆகியோர் மீதும் வழக்கு தொடர உள்ளேன். தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தவறான மற்றும் அவதூறு கருத்துக்களை கூறியதற்காக, தானாக அவதூறு வழக்கு தொடர உள்ளேன். எனது குடும்பத்தினர் எந்தவித தொழிலிலும் ஈடுபடவில்லை. ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறு இருக்கையில், விளையாட்டு அமைப்பில் அவர்கள் ஏன் ஈடுபட வேண்டும். மன்னிப்பு கோருங்கள் அல்லது அவதூறு வழக்கு தொடருவேன் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை என கூறினார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மியின் தீபக் பாஜ்பாய் கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிறகு மக்கள் அனைவரும் ஆதாரங்களை தெரிந்து கொண்டுள்ளனர். ஊழல் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக போராடுவோம் என உறுதிபூண்டுள்ளோம் என கூறினார்.

மற்றொரு தலைவர் அசுதோஷ் கூறுகையில், அவதூறு வழக்கு என அறிவித்து ஜெட்லி எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள். நீங்கள் எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளீர்கள். நாங்கள் மக்கள் நீதிமன்றத்திற்கு உங்களை அழைத்து செல்வோம் என கூறியுள்ளனர்.




-

 

 

இளம் குற்றவாளி விடுதலை சர்ச்சை ; சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

 

புதுடில்லி: மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தும் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 2012 டிசம்பர் மாதம் நடந்த இந்த வழக்கில் சிக்கிய சிறுவன் என்ற காரணத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவன் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். சிறைக்காலம் முடிந்ததால் நேற்று அவன் விடுவிக்கப்பட்டான் .இருப்பினும் பாதுகாப்பு கருதி அவன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .


கடந்த வாரத்தில் இளம் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என டில்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு ஏற்கப்படவில்லை. தண்டனை காலம் முடிந்த ஒருவரை மீண்டும் சிறையில் அடைக்க முடியாது. அதே நேரத்தில் அவனது செயல்பாட்டை ஒரு கமிட்டி கண்காணிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது .
இந்நிலையில் மகளிர் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. மகளிர் கமிஷன் மனுவை சுப்ரீ்ம் கோர்ட் தள்ளுபடி செய்தது, குற்றவாளியின் தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியுள்ளது. சட்டத்தின்படியே அனைத்தும் நடந்துள்ளது . மனுதாரரின் கவலையில் நாங்களும் பங்கு கொள்கிறோம், அதே நேரத்தில் நாங்கள் எவ்வித உதவியும் செய்ய முடியாது என நீதிபதிகள் ஏ .கே. கோயல் , யு.யு. லலித் ஆகியோர் தெரிவித்தனர்.

இன்று கறுப்பு நாள் : பெண்கள் ஆணைய கமிஷன் தலைவர் மாலிவால் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில்; நமது சட்டம் வலுவிழந்து காணப்படுகிறது , இன்று ஒரு கறுப்பு நாள், மேலும் நாங்கள் வீதிக்கு சென்று போராடுவோம் என்றார்.

ஆச்சரியமில்லை: சுவாமி: இன்றைய உத்தரவு எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை, இது எனக்கு ஏற்கனவே தெரியும், நான் டில்லி ஐகோர்ட்டில் வாங்கிய ஆர்டர் மிக சிறந்தது என பா.ஜ ., தலைவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

போராட்டம் தொடரும்: மாணவியின் தாயார் ஆஷாதேவி சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கூறுகையில்; கோர்ட் இதில் எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும், இருப்பினும் எனது போராட்டம் தொடரும் என்றார் .

நேற்று டில்லி ராஜ்பாத் மற்றும் ஜந்தர்மந்தரி்ல் மரணமடைந்த நிர்பயாவின் பெற்றோர்கள் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர் .

- Dinamalar
- -

 

 

வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு




வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு,  பார்த்தசாரதி கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Dinamani
- - -