வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பார்த்தசாரதி கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- Dinamani

No comments